புனிதப்போராளி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, December 24, 2008

போய் வா பாபா போய் வா

வழக்குகளையே வாழ்க்கையாய் வாழ்க்கையே வழக்குகளாய் வாழ்ந்து சென்ற என் பாபாவே உன்னைப்போல் யார் தாங்குவார்கள் இத்தனை வழக்குகளை

சிறை ஆறுமாதம் நீதிமன்றம் ஆறுமாதம் என்று சிறைப்பட்டுக் கிடந்த எங்கள் சிறைப்பறவையே நீ விடுதலை ஆகிவிட்டாயா எப்படித் தாங்குவோம் உன் பிரிவை!

நடை பிணமாய் இருந்த சமுதாயத்தை நிமிர வைத்தாயே! உன் தீப்பொறி பேச்சுகளால் தண்ணீருக்கும் தீ வைத்தாயே! உன் நினைவால் எங்கள் கண்ணீரும் கொதிக்குதப்பா எப்படி மறப்போம் உன்னை

உன் கூட்டங்கள் எல்லாம் மாநாடுகள் நீ பேசியதெல்லாம் தீர்மானங்கள் அந்த போர் பிரகடனங்களை மீண்டும் எங்கே கேட்போம் நாம்!வகுப்பறைகளில் பாடம் நடத்துவது போல் அமர்ந்து ஆர்ப்பரித்து பேசுவாயே சிலர் இனிக்க இனிக்க பேசினாலும் கசக்கும் நீ ஏசினாலும் இனிக்குமே திட்டினாலும் தித்திக்குமே அடிபட்டு மிதிபட்டு காலமெல்லாம் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட சமுதாயத்தை வீறுகொண்டு எழச் செய்தாய்

அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் வாழ்வாய் கொண்ட அக்கிரமத்தை ஐயோ பயங்கரவாதம் தீவிரவாதம் என்று அலறவைத்தாய் பதறவைத்தாய் கதறவைத்தாய் சிதறவைத்தாய் எங்கள் நெஞ்சங்களை குளிர வைத்தாய்

இன்று எங்கள் நெஞ்சங்களில் வடுவாய் அமர்ந்து எங்களை வாட்டுகின்றாயே! நீ பெற்ற காயங்களில் இரத்தம் வடிந்துவிட்டது காய்ந்து விட்டது உன் புனித பயணம் முடிந்து விட்டது ஆனால் எங்கள் காயங்கள் ஆறவில்லையே!

நியாயங்கள் கிடைக்கவில்லையே இரத்தம் கசிகின்ரதே நெஞ்சம் எரிகின்றதே எப்படி அணைப்போம் இந்த சோகத்தீயை புரியவில்லையே!

என் சமுதாயத்தில் சிலர் எம்.எல்.ஏ, எம்.பி.யானார்கள் அமைச்சர்களும் கவர்னரும் ஏன் ஜனாதிபதிகளும் ஆனார்கள் ஆனால் நீ பெற்ற ஷஹாதத் என்ற பதவி இவைகளுக்கு ஈடாகுமா? நீ செய்த தியாகங்களுக்கு இவைகள் இணையாகுமா?

பெருமை படுகின்றோம் பொறாமை படுகின்றோம் பொறுமை கொள்கின்றோம் நாங்கள்! நீ தந்த ஜிஹாத் உணர்வை நெஞ்சில் தாங்கி எங்கள் கண்ணீரைத் துடைத்து உன்ணை வழியனுப்புகின்றோம் போய் வா பாபா போய் வா.

நீ விட்ட பணியை நாங்கள் தொடருகின்றோம் நீ கண்ணுரங்கு களைப்பு தீர கண்ணுரங்கு நீ இனி சிறைப் பறவையில்லை சொர்க்கப் பறவை சுதந்திரப் பறவை பறந்து செல் எங்களை மறந்து செல் நீ மீண்டும் வரமாட்டாய் எங்களுக்குத் தெரியும் மீண்டும் சந்திப்போம் நாளை மறுமையில் இன்ஷா அல்லாஹ் போய் வா பாபா போய் வா

-நன்றி ரபிக் அஹமது